லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் திரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய லோகேஷ் கனகராஜ் 50 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி விட்டார் என ராதா ரவி பேசியுள்ளார்.
மேலும், அவர் அருகே இருந்த டப்பிங் யூனியன் மெம்பர் சின்மயியை யாரும் டப்பிங் பேச அனுமதிக்கவில்லை என்றும் நைட்ல திருட்டுத்தனமா வந்து அவர் பார்த்த வேலை தான் அந்த படத்தின் டப்பிங் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ஸ்டார் கிட் ரெடி… மகனை சினிமாவில் களமிறக்கும் தனுஷ்… எந்த படத்தில் தெரியுமா?
டப்பிங் யூனியனில் மீண்டும் சின்மயி வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா எனக் கேட்க, ராதா ரவி அதிரடியாக அவர் அந்த கம்பாவுண்ட்டுக்கு வெளியே வந்து நின்று என்ன வேண்டுமானால் பேசலாம். காம்பவுண்டுக்குள் அவரை ஒருநாளும் சேர்க்க மாட்டோம் என பகீர் கிளப்பி உள்ளார்.
வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த பாடகியும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான சின்மயி ராதா ரவி மீதும் ஏகப்பட்ட புகார்களை அடுக்கிய நிலையில், தொடர்ந்து அவர் மீது டப்பிங் யூனியன் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நான் பிளேபேக் சிங்கர் தெரியுமா?.. ஃபுல் போதை.. பிரபல பாடகர் விமான நிலையத்தில் பண்ண அலப்பறை!..
இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை என சினிமா வட்டாரத்தில் பலரும் பேசி வருகின்றனர்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…