×

நான் கர்ப்பமா... தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள்!!!

உங்களின் யூடியூப் சேனல் பார்வையாளர்களை அதிகரிக்க இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்றும் கண்டித்துள்ளார் பாடகி சின்மயி. 

 
f855a456-d50b-48b9-a0f4-3faabe804853

பிரபல பின்னணி பாடகியான சின்மயி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக யூடிப் சேனல்களில் பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இதனை தொடர்ந்து தன்னுடைய கர்ப்பம் தொடர்பாக பரவியுள்ள வதந்திகளுக்கு எதிராக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பிரபல பின்னணி பாடகி சின்மயி. 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்மயி தனது எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும், குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் ஷேர் செய்தது இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே சின்மயி கர்ப்பமாக உள்ளதாக சில யூடியூப் சேனல்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து அறிந்த பாடகி சின்மயி, தன்னுடைய கர்ப்பம் தொடர்பாக இணையத்தில் பரவி வரும் செய்திகள் பொய் என்றும், பொய்யான செய்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் உங்களின் யூடியூப் சேனல் பார்வையாளர்களை அதிகரிக்க இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்றும் கண்டித்துள்ளார் பாடகி சின்மயி. 

மேலும், அப்படியே தனக்கு குழந்தை பிறந்தாலும் அதன் புகைப்படங்களை ஒரு போதும் சமூக வலைதளத்தில் பகிர போவதில்லை என்றும், தனது திருமண புகைப்படங்களை கூட எப்போதும் தான் இணையத்தில் பகிர்ந்தது இல்லை என்றும் கூறியுள்ளார் பாடகி சின்மயி.

From around the web

Trending Videos

Tamilnadu News