×

4 பேருக்காக பெத்த பிள்ளைய இப்படி அசிங்கப்படுத்தனுமா? சிவானி அம்மாவை வியாசிய சின்மயி!...

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெத்த மகளையே அசிங்கமாக பேசி, திட்டினார் ஷிவானியின் அம்மா. 

 

டி.ஆர்.பி.க்காக அந்த அம்மாவை இப்படி பேச வைத்தார்களா, இல்லை இது தான் அவரின் குணமா என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கேட்டார்கள். இது குறித்த ட்வீட் ஒன்றை பார்த்த பாடகி சின்மயி கூறியிருப்பதாவது, நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. ஆனால் இந்த தாய் தன் மகளையே அசிங்கப்படுத்தியது எனக்கு தவறாகத் தெரிகிறது.

உங்கள் கேரக்டரை அசிங்கப்படுத்தும் தாய் இல்லை என்றால் நீங்கள் லக்கி என்று உணருங்கள். ஊர்ல 4 (உதவாக்கரை) மக்கள் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர் தங்கள் மகள்களையே அசிங்கப்படுத்த முக்கிய காரணம். நீங்கள் ஒரு பெற்றோர் எனில்- தயவு செய்து உங்கள் மகள்களின் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை நிறுத்தவும். ஒரு அடல்ட் போன்று பொறுப்பாக பேசுங்கள் என தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News