காசி பின்னணியில் ஒரு ஃபீல்-குட் மேஜிக்! கோவிந்த் வசந்தா இசையில் உருக வைக்க வரும் 'சின்ன சின்ன ஆசை'!

மனித மனங்களுக்குள் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத ஆசைகளையும், நுண்ணிய உணர்வுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள ஃபீல்-குட் திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'. பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில்
 
chinna chinan asai

மனித மனங்களுக்குள் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத ஆசைகளையும், நுண்ணிய உணர்வுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள ஃபீல்-குட் திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'. பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிக்க, வர்ஷா வாசுதேவ் இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். காசி நகரில் தற்செயலாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் நெகிழ்ச்சியான தருணங்களை, அக்மார்க் எமோஷனல் டிராமாவாக இந்த படம் பேசவுள்ளது.

இப்படத்தில் சமீபத்தில் வெளியான 'கருப்பு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிரள வைத்த பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் 'ரோஜா' புகழ் மதுபாலா ஆகியோர் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே சுவாரசியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

chinna chinna asai


விஜய் சேதுபதியின் பிளாக்பஸ்டர் படமான '96' புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களும் கேட்கும் போதே இதயத்தை வருடும் வண்ணம் திங்க் மியூசிக் (Think Music) மூலம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். மேலும் கலை இயக்கத்தை சாபு மோகனும், ஒலி வடிவமைப்பை ரெங்கநாத் ரவியும் கவனித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பான்-இந்தியா படமாக உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' திரைப்படம், சென்சார் வாரியத்திடம் இருந்து குடும்பங்கள் கொண்டாடும் 'U' சான்றிதழைப் பெற்றுள்ளது.

இப்படம் குறித்துப் பேசிய படக்குழுவினர், "ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளையும், உணர்வுகளையும் அதன் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வந்துள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களும் தங்களை இதோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நெஞ்சை நனைக்க வரும் இந்த 'சின்ன சின்ன ஆசை' திரைப்படத்தை பிரபல முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் (AGS Cinemas) வரும் ஜூன் 19 அன்று தமிழகமெங்கும் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

Tags

From Around the web