சூட்டிங்கை பாதியில் நிறுத்திய விசு… காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு

0
125

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் இயக்குனர் சந்தான பாரதி. தயாரிப்பாளர் டி சிவா படம் வெற்றி பெற என்ன காரணம்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் சொல்கிறார். என்னன்னு பார்ப்போமா…

சின்ன மாப்ளே படத்தின் கதாநாயகன் பிரபு முதல்லயே தெரியும். கலைமணி சார் கதை சொன்னாரு. ஸ்கிரிப்டா பண்றதுக்கு லேட்டாச்சு. அவரால பண்ண முடியல. அப்புறம் பிரபு சார் சொல்லி கிரேசி மோகனைப் பார்த்தேன். ஜூன் 7ம் தேதில இருந்து டைம் இருக்கு. மே 25ம் தேதி வந்து கதையைக் கேட்குறாரு கிரேசி மோகன். ஜூன் 2ம் தேதி 65 சீனோடு கதை சொல்றாரு. எல்லாருமே கைதட்டி ரசிச்சாங்க. ஒரு மிஸ்டேக் சொல்லல.

முதல் நாள் சூட்டிங். தி.நகர்ல எடுக்கணும். அப்போ விசு சார் வந்தாரு. சிவா எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? என்னன்னு கேட்டேன். பாதில படத்தை நிறுத்துங்கன்னு சொன்னாரு. கிரேசி மோகன்கிட்ட ஒண்ணு கேட்டுருக்காரு. அதுக்கு அப்புறம் ஏதோ நடந்துருக்கு. அதனால தான் படத்தை நிறுத்தச் சொன்னாரு.

என்னன்னு பார்த்தா படத்துல பிரபு, கிரேசி மோகன்கிட்ட ‘நான் பொய் சொல்ற மாதிரி வேணாம். எல்லாமே விசு சார் சொல்ல நான் செய்ற மாதிரி கதை எழுதுங்க’ன்னு சொன்னாராம். அந்த ஆர்டர்லயே அவரும் எழுதி முடிச்சிருக்காரு. இதைக் கேட்டதும் விசு ‘நான் சொல்லி பிரபு செய்ற மாதிரி இருக்கக்கூடாது.

அது அவரோட சுயமான நடிப்பு மாதிரி வராது. அப்புறம் அது கிஷ்மு கேரக்டர் மாதிரி வந்துடும். அதனால நான் மாட்டி விடுற வரை தான் என்னோட வேலை. அப்புறம் எல்லா பிராடு தனமும் நீயே பண்ணு. உன்னோட சுயவேலையைக் காட்டித் தப்பிச்சிக்க. அப்ப தான் படம் நிக்கும்’ அப்படின்னு பிரபுகிட்ட சொன்னாரு. உடனே விசு சார் சொன்னதை கரெக்ட்னு சொன்னாங்க.

அப்புறம் பிரபு சாரும் கிஷ்முன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டாரு. அப்புறம் அன்னைக்கு நைட் 7 மணிக்குள்ள டோட்டலா மாத்திட்டாரு கிரேசி மோகன். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் அன்னைக்கு விசு கொடுத்த ஐடியா தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news