Categories: latest news throwback stories

வாரி வழங்கிய வள்ளல்…அவர் வறுமையில் தவித்தபோது உதவியது யார் தெரியுமா?…

எம்ஜிஆரின் படங்களை அதிகமாக எடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் சின்னப்பத்தேவர்.ஆனால் அவருக்கும் எம்ஜிஆருக்கும் எப்படி இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என்பது சற்று விசித்திரமான கதை.

ஒரு காலத்தில் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸுக்கு எம்ஜிஆர் படங்கள் பண்ணி கொண்டிருந்த சமயம். அப்போது எம்ஜிஆரின் வீட்டிற்கு பக்கத்தில் சின்னப்பத்தேவர் உடற்பயிற்சி மையம் வைத்திருந்தாராம்.

அங்கு அடிக்கடி போய்விட்டு வருவாராம் எம்ஜிஆர். அங்கு இருந்தே அவர்களுக்குள் நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் எம்ஜிஆரின் வீட்டருகே சின்னப்பத்தேவர் போகும் போது எம்ஜிஆரின் தாயார் சத்தியபாமா வீட்டின் முன் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தாராம்.

அதை பார்த்த சின்னப்பத்தேவர் ஏன் என்னாச்சு என சத்தியபாமாவை பார்த்து கேட்க ‘இல்ல சிறிது நேரத்தில் சம்பளம் வாங்கி வருகிறேன் என்று எம்ஜிஆர் சொல்லிவிட்ட்டு போனான்.இன்னும் வரவில்லை. அதை வைத்து தான் அரிசி வாங்கி சாப்பாடு செய்யனும் ’ என்று சத்தியபாமா சொன்னாராம். உடனே சின்னப்பத்தேவர் கடைக்கு போய் அரிசி வாங்கி சத்தியபாமாவிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறார். சிறிது நேரத்தில் எம்ஜிஆர் வர நடந்ததை சொல்லியிருக்கிறார் அவரது தாயார். அதை கேட்டு எம்ஜிஆருக்கு சின்னப்பத்தேவர் மீது பெரிய மதிப்பும் அன்பும் வந்திருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini