நாளை தொடங்குகிறது சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

நாளை தொடங்குகிறது சிரஞ்சீவி நடிக்கும்  புதிய படத்தின் படப்பிடிப்பு

 
chiranjeevi

தெலுங்கு திரையுலகில் மெகாஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவருக்கான ரசிகர்கள் வட்டம் மிகப்பெரியது. மன சங்கர வர பிரசாத் கரு சூப்பர் ஹிட் படத்தை அடுத்து அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

விஜய் நடித்த ஜனநாயகன் படத்தினை தயாரித்த கே வி என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். தற்போதைக்கு Chiru158 எனேஉ அழைக்கப்படும் அப்படத்தினை  பாபி கொல் இயக்குகிறார். இவர்கள் கூட்டணி ஏற்கெனவே வால்டர் வீரய்யா  என்ற படம் மூலம் சிரஞ்சீவியின் உச்சகட்டமான மாஸ்  அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில்  படங்களை தயாரித்துவந்த கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Chiru158

இந்த நிலையில் இப்படத்தின்  பிரம்மாண்டமான தொடக்க விழாவில்  பவர் ஸ்டார்  பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வித் லவ் புகழ் அனஸ்வரா ராஜன்  நடிக்கிறார்.

From Around the web