×

தல அஜித் படத்தால் நின்றுபோன சிரஞ்சீவியின் படப்பிடிப்பு.....

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் என்றால் அது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் தான். இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்குப் பின்னர் அஜித்தை பெரிய திரையில் பார்த்து இரண்டு
 
godfather

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் என்றால் அது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் தான். இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்குப் பின்னர் அஜித்தை பெரிய திரையில் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலானதால் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் உள்ளனர்.

தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக ஒட்டு மொத்த படக்குழுவினரும் தற்போது ரஷ்யா சென்று உள்ளனர். படக்குழுவினர்களுடன் இணைந்து படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவும் அவரது கேமராவுடன் ரஷ்யாவிற்கு சென்று விட்டார்.

gad father

வலிமை படக்குழுவினர் ரஷ்யா சென்றதால் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த இரண்டு படங்களுக்கும் நீரவ் ஷா தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது இவர் வலிமை படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்று விட்டதால், காட்பாதர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேதாளம் படம்தான் தற்போது தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

god father

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதற்காக அஜித் உள்ளிட்டவர்கள் ரஷ்யாவுக்கு கிளம்பி சென்றுள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் படக்குழுவோடு சென்றுள்ளார்.

விரைவில் வலிமை படத்தின் படப்பிடிப்பை நீரவ் ஷா நாடு திரும்பிய பின்னர் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News