Categories: Cinema News latest news

பல பேருடன் டேட்டிங்…! குளியலைறை வரை நெருக்கம்…! சித்ராவை மிரட்டிய பிரபல ஆண் தொகுப்பாளர்…

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்னும் சில பேர் அவரின் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில் அவர் மரணம் தொடர்பான சில மர்மமான தகவல்கள் மீடியாவை குழப்பி வருகின்றது.

ஏற்கெனவே அவரின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் சித்ரா மரணம் தற்கொலை இல்லை, கொலைதான் அதுவும் ஹேமந்த் மட்டும் செய்யவில்லை கூடவே 4 பேருக்கும் தொடர்பிருக்கிறது. அது ஹேமந்த்திற்கு தெரியும், ஆனால் போலீஸில் சொல்லாமல் இருக்கிறார், பொண்டாட்டி செத்த கவலை கூட இல்லாமல் குடியும் குடித்தனமுமாக ஜாலியா இருக்கிறான் என பல தகவல்களை கூறி வந்தார்.

இந்த நிலையில் அவர் தோழி சித்ராவை பற்றியே பெரிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். அவர் கூறுகையில் “ சித்ராவிற்கு ஏற்கெனவே நிறைய பேருடன் தொடர்பு இருக்கிறது, அவருக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் சித்ரா அடிக்கடி டேட்டிங் செய்துள்ளார். அதுவும் குளியலறை வரை நெருக்கம் காட்டியுள்ளார். சித்ரா நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஒரு பிரபல ஆண் தொகுப்பாளர் எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி சித்ராவை மிரட்டி வந்தார்” என பகீர் தகவலை கூறினார்.

மேலும் ஹேமந்த் சில பேரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என போலீஸில் புகார் அளித்தார். அதிலிருந்து தான் இதுமாதிரியான தகவல்கள் மீடியாவில் பரவி வருகின்றன. சித்ரா ஹேமந்த் அந்த ஹோட்டலில் ஒன்றாக இருந்துள்ளனர். அங்கு நிறைய காண்டம்கள் இருந்தன. அதை நானே பார்த்திருக்கிறேன். இருவருக்கும் இடையில் குளியலைறை வரை நெருக்கம் காட்டும் சித்ரா ஏன் ஹேமந்தை வெளியே போகச் சொல்ல வேண்டும்? ஆதலால் ஹேமந்த் சொல்வதில் எல்லாமே பொய் இருக்கிறது என அவர் தோழி ரேகா நாயர் கூறி வருகிறார். ஆனால் ரசிகர்கள் சில பேர் ரேகா நாயரை திட்டி வருகின்றனர். ஏம்மா? நீ சித்ரா தோழிதானே? இப்படி அப்பட்டமா அவரை பற்றி இறந்த பின்னரும் சொல்வது நியாயமா? என கேட்டு வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini