×

கடன் தொல்லை.... சித்ரா என்னிடம் பணம் கேட்டார்... மாமனார் வாக்குமூலம்? வக்காளத்து வாங்கும் வக்கீல்!

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக, குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே கருதப்பட்டவர் நடிகை சித்ரா. கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மரணத்தின் அவரின் பெற்றோர்கள் சந்தேகமடைந்த நிலையில் அவரின் காதல் கணவர் ஹேம் நாத் மீது புகார் அளிக்க சித்ரா தன் மாமனாரிடம் கடைசியாக பேசிய குரல் பதிவுகளை வைத்து போலிசார் ஹேம் நாத்தை கைது செய்தனர்.

இந்நிலையில் ஹேம் நாத்தின் அப்பா, சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன் தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையை செலுத்த பணம் தரும்படி என்னிடம் கேட்ட போது நானும் சம்மதித்தேன். சித்ரா ஏதேனும் பொருளாதார பிரச்சனையில் சிக்கினாரா? அல்லது அது சம்மந்தமாக யாரும் அவரை மிரட்டினார்களா என தெரியவில்லை என கூறினார்.

இந்நிலையில் ஹேம் நாத்தின் வக்கீல் இந்த தற்கொலை தனிப்பட்ட இருவரின் சண்டையால் ஏற்பட்டது போல இல்லை. பிரபலத்தில் தற்கொலை என்கிற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும். சித்ரா கார் வாங்கியுள்ளார், புது வீடு கட்டியுள்ளார், எனவே பொருளாதார ரீதியாக பிரச்சனை வந்திருக்கலாம். இதையும் விசாரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News