×

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சித்ரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

ரசிகர்களை திருதிப்படுத்த அவரும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மிட்நைட்டில் நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தண்ணீரில் மிதந்தபடி ஈரம் சொட்ட கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசிகள் பலரும் " நீ நைட்டுல எப்போப்பாரு போஸ்ட் போடுவியா? கொஞ்ச சீக்கிரமா தான் போட்டால் என்ன ? என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News