Categories: Cinema News latest news throwback stories

என்.எஸ்.கே. பண்ண தப்பை எம்.ஜி.ஆர் பண்ணல?? ஓஹோ இதுதான் காரணமா??

தமிழின் பழம்பெரும் நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் தொடக்கத்தில் நாடக கலைஞராக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

Kalaivanar

தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு அள்ளித் தருபவர் கலைவாணர். சினிமா வரலாற்றில் மிகப்பெரும் வள்ளல் என்று போற்றப்பட்டவர் கலைவாணர். எம்.ஜி.ஆர் கூட “நான் செய்யும் தான தர்மங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்” என பல முறை கூறியிருக்கிறாராம்.

ஆனால் எம்.ஜி.ஆர் சேர்த்த அளவுக்கான பணமும் புகழும், என்.எஸ்.கிருஷ்ணனால் சேர்க்க முடியவில்லையே என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கப்பட்டது.

NSK

இந்த நிலையில் அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் “எம்.ஜி.ஆருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்பது வள்ளல் தன்மை மட்டுமே. அதை நீக்கிவிட்டு பார்த்தால் எம்.ஜி.ஆர் பல ஆண்டுகள் சினிமா உலகில் நீடித்தவர். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்நாளே மிகவும் குறைவானதாக இருந்தது.

ஆதலால் அந்த நாட்களில் எந்த அளவுக்கு என்.எஸ்.கிருஷ்ணனால் சம்பாதிக்க முடியுமோ அந்த அளவுக்குத்தான் அவரால் சம்பாதிக்க முடிந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை மற்றவர்களுக்காக வாரி வாரி வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி அல்ல” என கூறினார்.

MGR

மேலும் பேசிய அவர் “எம்.ஜி.ஆர் மிகவும் திட்டமிட்டு வாழ்க்கை நடத்தியவர். தனக்காக ஓரளவு சேமிப்பை வைத்துக்கொண்டு மீதம் உள்ள பணத்தைத்தான் மக்களுக்காக வாரி வழங்கினார். இது தான் இவர்கள் இருவருக்குமான வித்தியாசம். மேலும் இந்த வித்தியாசம் காரணமாகத்தான் இருவருக்கும் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தது” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad