×

தற்கொலைக்கு முன் சித்ரா கடைசியாக யாருக்கு கால் செய்து பேசியுள்ளார் தெரியுமா?

நடிகை சித்ரா மறைவை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தின் உச்சத்தில் ஆழ்த்திவிட்டார்.

 

அவரது இறப்பிற்கு பின் சித்ரா பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. டிசம்பர் 8 படப்பிடிப்பை முடித்து ஹோட்டல் வந்த சித்ரா கடைசியாக அவரது மாமனாருக்கு தான் போன் செய்துள்ளாராம்.

ஹேமந்துடன் பிரச்சனைக்கு பிறகு மாமனாருக்கு போன் செய்து, கேவலமான வார்த்தைகளால் அவர் திட்டுகிறார், விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இப்படியெல்லாம் பேசுவது கஷ்டமாக இருக்கிறது என அழுது புலம்பியுள்ளார் சித்ரா.

மேலும் ஹேமந்தால் பல பிரச்சணைகளை சந்தித்திருக்கிறார். சித்ராவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவது, சந்தேகப்படுவது, படப்பிடிப்பி்ல் இப்படி தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் விதி முறைகள் போட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News