×

தொழிலதிபருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது - மாப்பிள்ளை இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்ப்போது சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மாப்பிள்ளையின் புகைப்படமும்  இணையத்தில் வெளியாகி ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News