Connect with us

Cinema News

சாமில திருநெல்வேலி!.. சியான் 62ல திருத்தணி.. அறிமுகமே வெறித்தனமா இருக்கே.. இயக்குனர் யாரு தெரியுமா?..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்கிற ரீதியில் சியான் விக்ரம் 62 படத்தின் அப்டேட் சொன்ன டைம்ல வரவில்லை என்றாலும் கொஞ்சம் தாமதமாக வந்தாலும் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.

சியான் விக்ரம் தனது வாரிசை சினிமாவில் அறிமுகப்படுத்தினாலும், இன்னமும் செம ஸ்பீடாக தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி துருவ் விக்ரமுக்கே பெரும் போட்டியாக மாறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆல் டைம் ப்யூட்டி குயின்மா நீ! கவர்ச்சியே பொறாமைப் பட வைக்கும் அழகில் சமந்தா

மகான், பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாவது பாகம் என நடித்து அசத்திய சியான் விக்ரம் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு செல்லும் அளவுக்கான நடிப்பையும் உழைப்பையும் தங்கலான் படத்தில் கொட்டியிருப்பதை ஒவ்வொரு போஸ்டரிலும் காண முடிகிறது.

தங்கலான் படத்திற்கு பிறகு சில மாதங்களாவது சியான் விக்ரம் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்த்தால், ரெஸ்ட்டா எனக்கா? அதெல்லாம் வேண்டாம்ங்க என சொல்லிக் கொண்டு அதிரடியாக 62வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விக்ரம் செய்த மேஜிக்! தூசு தட்டி வெளியே எடுத்த கௌதம் மேனன் – ரிலீஸுக்கு பின்னாடி இப்படி ஒரு ஒப்பந்தமா?

ஏகே 62வுக்கும் சியான் 62வுக்கும் தான் போட்டி இனி இருக்கும் போல என எண்ணத்தூண்டும் வகையில் அதிரடி காட்டி உள்ளார். சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டுக்களையும் ஏகோபித்த முறையில் அள்ளிய சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.யூ. அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படத்தின் அறிவிப்பு அறிமுக டீசருடன் வெளியாகி உள்ளது.

போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே சென்று ஒரு பெண்ணிடமும் பெண் குழந்தையிடமும் தவறாக நடக்க முயன்றவர்களை தூக்கிப் போட்டு பந்தாடும் சியான் விக்ரமின் அதிரி புதிரி அறிமுகம் சாமி படத்தில் சியான் விக்ரமை பார்த்தது போல இருப்பதாக கூறுகின்றனர். இந்த முறை திருத்தணியில் சாமி விக்ரமின் வேட்டை இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top