தேயிலை தோட்டத் தொழிலாளர் பெண்களுடன் பாட்டுப் பாடி ஜாலி பண்ண சியான் விக்ரம்!.. செம அழகு!..

 
தேயிலை தோட்டத் தொழிலாளர் பெண்களுடன் பாட்டுப் பாடி ஜாலி பண்ண சியான் விக்ரம்!.. செம அழகு!..

சியான் விக்ரம் சமீபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து “அண்டங்காக்கா கொண்டக்காரி” பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். சியான் விக்ரம் அடுத்ததாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். படப்பிடிப்பு இடைவேளையில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுடன் சேர்ந்து பாடல் பாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும், அர்ப்பணிப்பான நடிப்பாலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர். “சேது”, “பிதாமகன்”, “அந்நியன்”, “ஐ” உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், தற்போது பல புதிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் வெளியான அவரது வீர தீர சூரன் படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, தனது 63வது படத்திற்காக இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது “சியான் 63” என அழைக்கப்படும் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளரும் சர்வம் மாயா படத்தின் டெலுலுவுமான நடிகை ரியா சிபு தான் முக்கிய ரோலில் கமிட் ஆகியுள்ளார்.

எளிமையான அணுகுமுறையால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற விக்ரம், தொழிலாளர்களுடன் நெருக்கமாக பழகிய விதம் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக “அண்டங்காக்கா” பாடலை அனைவருடனும் சேர்ந்து உற்சாகமாக பாடிய தருணம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், “சியான் விக்ரமின் எளிமைதான் அவரின் பலம்” என பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தவர்களை சியான் விக்ரம் அழைக்க அங்கு வந்த பெண்கள், சாமி படம் தான் பிடிக்கும், அந்நியன் தான் சூப்பர் என விக்ரமிடம் மனம் விட்டுப் பேசிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

From Around the web