Categories: Cinema News latest news

ஆறடி அர்னால்டை அண்ணாச்சி ஆக்கிட்டீங்களேடா!.. துஷாரா விஜயனுடன் தூள் கிளப்புறாரே சியான் விக்ரம்!..

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் அடுத்ததாக சியான் விக்ரம் நடித்து வரும் படத்துக்கு வீரதீரசூரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிக்கவில்லை.

இதையும் படிங்க: மகனுடன் நடிக்கும் கேப்டன் விஜயகாந்த்!.. ஏ.ஐ. டெக்னாலஜியில் 5 சீனும் சும்மா தெறியா இருக்குமாம்!..

அந்தப் படத்திற்கு பிறகு தற்போது சித்தா படத்தை பார்த்து சிலிர்த்துப் போன சியான் விக்ரம் அடுத்ததாக எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் வீரதீரசூரன் படத்தை இரண்டு பாகங்களை உருவாக்கி வருகிறார்.

அந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாக போவதாகவும் அறிவித்துள்ளனர். அதற்கான படப்பிடிப்புகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. மளிகை கடைக்காரர் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் நிலையில், அறிமுக வீடியோவிலேயே சியான் 62 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், மளிகை கடையில் துப்பாக்கி எடுத்து விக்ரம் சுடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

இதையும் படிங்க: ரஜினி கொடுத்த காசை நயன்தாரா படத்தில் போட்டு போண்டி ஆன நபர்!.. அப்செட்டில் சூப்பர்ஸ்டார்!..

இந்நிலையில், தற்போது டிவிஎஸ் 50 பைக்கில் துஷாரா விஜயனை முன்னாடி உட்கார வைத்து படுரொமான்ஸாக சியான் விக்ரம் பின்னாடி கடை சரக்குகளை எடுத்துச் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு சம்பவம் லோடிங் என பதிவிட்டுள்ளார்.

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இன்னொரு பக்கம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து தரமான படங்களை கொடுக்க வேண்டும் என இயக்குநர்களையும் கதைகளையும் தேர்வு செய்து இருவரும் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அட இருங்கப்பா… அவங்களாம் பாவம் இல்லையா… கில்லி ரீரிலீஸின் மொத்த வசூலால் அதிரும் கோலிவுட்….

Saranya M
Published by
Saranya M