Categories: Cinema News latest news

தமிழில் மீண்டும் ஒரு கே.ஜி.எஃப்.! தங்க சுரங்கத்தை பற்றிய பா.ரஞ்சித்தின் புதிய படம்.!

நடிகர் விக்ரம் தற்போது மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில், இறுதியாக கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்புகளை அண்மையில் நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர்-2 ஆம் தேதி வெளியானது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார். தற்போது, ‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் அல்லது ஜி.வி பிரகாஷ் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சியான்-61 திரைப்படம் ஆக்சன் நிறைந்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது. சாண்டல்வுட் என கூறப்படும் கன்னட சினி உலகில் பிரமாண்டமாக உருவாகி இந்தியா முழுவதும் வெளியான திரைப்படம் கே.ஜி.எப். இப்பட கதையின் மையப்புள்ளி என்பது கோலார் தங்கச் சுரங்கத்தின் வரலாறு பின்னணியில் ஆக்சன் கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இதே போல கோலார் தங்க சுரங்கம் பற்றிய ஒரு ஆக்சன் கதைக்களத்தை தான் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தும் சியானை வைத்து படமாக்கவுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த கதையை பா ரஞ்சித் மெட்ராஸ் படத்திற்கு முன்னரே எழுதி முடித்துவிட்டாராம். அப்போதே தயாராகி இருந்தால் கே.ஜி.எப்-ற்கு முன்னரே தமிழ் சினிமா கோலார் தங்க சுரங்கம் பற்றி பேசியிருக்கும்.

Manikandan
Published by
Manikandan