Categories: Cinema News latest news

சியான் விக்ரமுக்கு இந்த கொடுமையா.?! இதெல்லம் வேணாம் ரஞ்சித்… கெஞ்சும் ரசிகர்கள்….

சியான் விக்ரம் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அடுத்ததாக, வரும் 31ஆம் தேதி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது.

 

அதனை அடுத்து, செப்டம்பர் 30இல் மணிரத்னம் இயக்கத்தில் பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் எனும் பிரமாண்ட காவியம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படங்களை அடுத்து சியான் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

 

அந்த திரைப்படம் விக்ரமின் 61வது திரைப்படமாக தயாராக உள்ளது. கோலார் தங்க சுரங்கத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பா.ரஞ்சித் படத்திற்கு ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் படம் தயாராக உள்ளது.

இதையும் படியுங்களேன் –  நீங்க திமிரு என நினைத்தாலும் பரவாயில்லை… அந்த சம்பவத்தில் சொக்க தங்கம் நம்ம கேப்டன் விஜயகாந்த்.!

இந்த படத்தில் என்றும் இளமையாக இருக்கும் நம்ம சியான் விக்ரமுக்கு இளம் நாயகி யாரேனும் ஜோடி சேருவார் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கையில், பா.ரஞ்சித் 40 வயது ஹீரோயின் தான் வேணும் என அடம்பிடித்து தேடி கொண்டிருக்கிறாராம். இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். அப்போ விக்ரம் இதில் வயதான தோற்றத்தில் தான் படம் முழுக்க வர போகிறாரா என அதிர்ந்து போய்யுள்ளனர்.

Manikandan
Published by
Manikandan