×

சீயானை மிஞ்சிய த்ருவ்... வொர்க்கவுட்டில் மரண மாஸ் காட்டிய வாரிசு!

த்ருவ் தன் அப்பாவுடன் சேர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

 

மேலும் வித்தியாசமான கதைகளை படமாக்குவதற்கு பெயர் போன மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார். மாரி செல்வராஜ் ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தை இயக்குவதால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து தன் உடம்பை மரணமாக ஏற்றியிருக்கிறார்.

த்ருவ் விக்ரம். படத்திற்காக உடலை வருத்திக் கொள்ளும் விக்ரமின் மகனாக இருந்து கொண்டு த்ருவ் இதை கூட செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம். படத்திற்காக உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதுமாக இருப்பவர் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவரின் மகன் படத்திற்காக தன்னை வருத்திக் கொள்வது இயற்கை தானே.

சீயான் 60 படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குமாம். கார்த்திக் சுப்புராஜ் விக்ரம், த்ருவை வைத்து கேங்ஸ்டர் டிராமாவை படமாக்குகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News