×

ஆசை இருந்தா ஆயுள் கூட தள்ளிப்போகும்டா! - வரவேற்பை பெற்ற சியான்கள் டிரெய்லர் வீடியோ

 

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிக குறைவு.  அந்த வரிசையில் வித்தியாசமான கதை களத்தோடு உருவாகியுள்ளது  ‘சியான்கள்’திரைப்படம்‌. 

இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற ‘சியான் சியான்’ மற்றும் ‘ஒட்டி ஒட்டி நானும் வரேன்’பாடல்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

சியான்கள் திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News