×

சியான்களுடன் சமையல் செய்த குக் வித் கோமாளி பாலா & புகழ் - அசத்தல் வீடியோ

 

வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிக குறைவு.  அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்தோடு வெளியாக உள்ளது ‘சியான்கள்’ என்ற திரைப்படம்‌. 

இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றா ‘சியான் சியான்’ மற்றும் ‘ஒட்டி ஒட்டி நானும் வரேன்’ஆகிய பாடல் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், சியான்கள் படத்தில் நடித்த நடிகர்களோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் மற்றும் பாலா ஆகியோர் படகு மூலம் கடலில் சென்று உணவு சமைத்து சாப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News