Categories: Cinema News latest news

விக்ரமில் அந்த பாட்டு நான் செஞ்சது.! புயலை கிளப்பிய ஹாரிஸ் ஜெயராஜ்.! அவரே கொடுத்த விளக்கம்…

லோகேஷ் கனகராஜ், இந்த பெயர் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். இவர் எதனை செய்தாலும் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது திரைப்படங்களில் பரவலாக தற்போது பழைய ஹிட் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே கைது திரைப்படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் வரும் சொக்கு சொக்கு வத்திக்குச்சி பாடல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதில் மன்சூர் அலிகான் மற்றும் நெப்போலியன் ஆகியோர் ஆடுவார்கள், ஆதித்தன் இசையமைத்து இருந்தார். இது குறித்து டிவீட் செய்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இந்த பாடலுக்கு நான் தான் புரோகிராமிங் செய்தேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்களேன் – 13 பேருக்கு அப்பாச்சி பைக்.! பரிசுகளை வாரி வழங்கும் வள்ளல் கமல்ஹாசன்.!

இதனை கண்டு ரசிகர்கள் புரோகிராமிங் அப்படி என்றால் என்ன என்று கேள்வி கேட்டனர். உடனே இசையமைப்பாளர் இசைக்கோர்ப்புகளை என்னிடம் கொடுத்து விடுவார். நான் அதஎ=னை சரியாக வடிவமைத்து ஒரு பாடலாக உருவாக்கி விடுவேன் இதுதான் புரோகிராமிங் என்று விளக்கம் அளித்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்னர் யுவன்சங்கர்ராஜா, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan