The Odyssey Box Office : 2 நாட்களில் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 19, 2026, 08:19 IST
2 நாட்களில் 'தி ஒடிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன்.
இவர் இயக்கியுள்ள புது படம் தான் 'தி ஒடிசி' (The Odyssey). இந்த படம் நேற்று முன்தினம் (ஜூலை 17-ஆம் தேதி) ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.
ஃபேன்டஸி ஆக்ஷன் ஜானர் படமான இதில் மேட் டாமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ராபர்ட் பேட்டின்சன், டாம் ஹாலண்ட், அன் ஹாதவே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வருகிறது. தற்போது, இப்படம் கடந்த 2 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.47.03 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
