The Odyssey Box Office : பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் 'தி ஒடிசி'... 3 நாட்களில் இத்தனை கோடியா?

 
The Odyssey

3 நாட்களில் 'தி ஒடிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. மேட் டாமன் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் தான் 'தி ஒடிசி'.

இதை ஹாலிவுட்டில் டாப் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கியிருக்கிறார். இப்படம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

இதில் முக்கிய ரோல்களில் அன் ஹாதவே, ராபர்ட் பேட்டின்சன், டாம் ஹாலண்ட் ஆகியோர் நடித்துள்ளனர். முழு படத்தையும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் படமாக்கி விஷுவலாக அசத்தியுள்ளனர்.

ஃபேன்டஸி ஆக்ஷன் ஜானர் படமான இது ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.73.19 கோடி வசூல் செய்திருக்கிறது.

From Around the web