The Odyssey Box Office : 4 நாட்களில் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
The Odyssey

4 நாட்களில் 'தி ஒடிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கிறிஸ்டோபர் நோலன்.

'ஓப்பன்ஹெய்மர்' படத்துக்கு பிறகு இவரது இயக்கத்தில் ரெடியாகியிருக்கும் புதிய படம் 'தி ஒடிசி'. ஃபேன்டஸி ஆக்ஷன் ஜானர் படமான இதை 91 நாட்களில் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் எடுத்து முடித்து விட்டார்களாம்.

இதில் கதாநாயகனாக மேட் டாமன் நடித்துள்ளார். இப்படம் உலகமெங்கும் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஆங்கிலம் மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து வெளி வந்தது. இதில் டாம் ஹாலண்ட், அன் ஹாதவே, ராபர்ட் பேட்டின்சன், சமந்தா மார்டன், ஜெண்டயா ஆகியோர் முக்கிய வேடங்களில் வலம் வந்துள்ளார்கள். 

இப்படம் ஒரு பக்கம் பாசிட்டிவ் விமர்சனங்களையும், இன்னொரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இருந்தாலும் வசூலில் குறைவைக்கவிலை. கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.2700 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.83.14 கோடியும் வசூல் செய்திருக்கிறது.

From Around the web