The Odyssey Box Office : 5 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் 'தி ஒடிசி' செய்த சாதனை!
5 நாட்களில் 'தி ஒடிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், 'தி ஒடிசி' படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு மிக அதிகம். காரணம் இதன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தான். அவருடைய முந்தைய படங்களின் சாதனை அப்படி.
ஃபேன்டஸி ஆக்ஷன் ஜானர் படமான இதில் மேட் டாமன் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், அன் ஹாதவே, டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ராபர்ட் பேட்டின்சன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளி வந்த இப்படத்திற்கு ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் முதல் நாளிலிருந்தே வசூலில் கெத்து காட்டி வருகிறது. அதன்படி கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.3000 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.92.63 கோடியும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
