The Odyssey Box Office : 9 நாட்களில் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' செய்த வசூல் இத்தனை கோடியா?
9 நாட்களில் 'தி ஒடிசி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. உலக புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் 'தி ஒடிசி'.
இது கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஆங்கிலம் மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த முழு படமும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் ஷூட் செய்திருக்கிறார்கள்.
இதில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன் ஹாதவே, ராபர்ட் பேட்டின்சன், ஜெண்டயா நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங்கிற்கு 100 நாட்கள் ப்ளான் பண்ணி, 91 நாட்களிலேயே எடுத்து முடித்து விட்டாராம் கிறிஸ்டோபர் நோலன்.
இப்படத்தை ஒரு பக்கம் பாராட்டியும், இன்னொரு பக்கம் நெகட்டிவ்வாகவும் பேசி வருகிறார்கள். வசூல் ரீதியாக இந்த படம் கடந்த 9 நாட்களில் உலக அளவில் ரூ.4300 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.129.15 கோடியும் கல்லா கட்டியுள்ளது.
