எக்ஸ் தளத்தில் HD தரத்தில் லீக்கானது தி ஒடிசி!
Jul 27, 2026, 10:30 IST
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஹாலிவுட்டில் வெளி வந்த படம் தான் 'தி ஒடிசி'. இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்து இந்தியாவிலும் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை ஹாலிவுட்டில் டாப் இயக்குநராக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக மேட் டாமன் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய வேடங்களில் அன் ஹாதவே, ஜெண்டயா, டாம் ஹாலண்ட், ராபர்ட் பேட்டின்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 10 நாட்களில் உலக அளவில் ரூ.6175 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ.142.86 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், முழு படமும் எக்ஸ் தளத்தில் HD தரத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின், உடனடியாக நடவடிக்கை எடுத்து படத்தை நீக்கியுள்ளனர்.
