Connect with us

Gossips

Chup – தப்பா பேசாதீங்க பா.! இது தனுஷ் பட இயக்குனரின் படத்தோட பேருதான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ் இவரை பாலிவுட்டில் நடிகராக அறிமுகப்படுத்தியது, ஆனந்த் எல் ராய் எனும் இயக்குனர்.

இவர் இயக்கத்தில் தான் ராஞ்சனா எனும் திரைப்படத்தின் மூலம் தனுஷ் ஹிந்தி படத்தில் கால்பதித்தார். அதன்பிறகு, இவர் இயக்கத்தில் ஷமிதாப் கலாட்டா கல்யாணம் இரண்டு ஹிந்திப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

மேலும், ஆனந்த் எல் ராய் அமிதாப் பச்சன் ஷாருக்கான் என அக்ஷய் குமார் என முன்னணி நடிகர்களை இயக்கியவர் இவர் அடுத்ததாக ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்கு “Chup” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக நடித்த சன்னி தியோல் என்பவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top