×

குஷ்புவுக்கு கத்திக்குத்து... வெளியான புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...

நடிகையாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவமெல்லாம் நடந்தது. அதன்பின், குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியலில் நடித்து வந்த அவர்  அரசியலில் குதித்தார்.
 

முதலில் திமுகவில் சில வருடங்கள் இருந்த அவர், சில காரணங்களால் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர் சமீபமாக பாஜகவை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில், கண்ணில் கட்டு போட்டிருக்கும் புகைப்படத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். என் கண்ணில் கத்தி பட்டுவிட்டது. எனவே சில நாட்கள் நான் ஆக்டிவாக இருக்க மாட்டேன். சீக்கிரம் மீண்டு வருவேன். வெளியே சென்றால் முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News