×

இப்படி ஆகிப்போச்சே!... நயன்தாரா திருமணத்திற்கு தடையாய் வந்த பரிகாரம்...  

சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல் என தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் நயன்தாரா. அந்த இரு காதல்களும் தோல்வியில் முடிந்துவிட ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டார். தற்போது அவரை அந்த காதல் நீடித்து வருகிறது. அந்த காதல் திருமனம் வரை சென்றுள்ளது.
 

கடந்த வருடம் இறுதியில் இவர்களின் திருமணம் குறித்து செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அவரை அது நடக்கவில்லை.  நயன் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் படப்பிடிப்பு எப்படியும் அடுத்த வருடம் முடிந்து விடும் என்பதால் அவரி திருமணம் அடுத்த வருடம் இறுதியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் ஜாதகத்தில் உள்ள தோஷப்படி அவர்கள் இருவரும் திருநாகேஸ்வரம்  சென்று பரிகார பூஜை  செய்ய வேண்டும் என குடும்ப ஜோதிடர் கூறிவிட்டாராம்.  தற்போது கொரோனா ஊரடங்கால் கோவில்களில் பூஜை செய்ய அனுமதி இல்லை. எனவே, ஊரடங்கு முடிந்த பின் நயனும், விக்னேஷ் சிவனும் அந்த கோவிலுக்கு சென்று பரிகார பூஜை செய்வார்கள் என செய்திகள் கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News