×

செம காமெடி பண்றீங்க.. வடிவேலு இடம் உங்களுக்குதான்.. சூர்யா ரசிகர்களை சீண்டிய மீராமிதுன்

நடிகை மீரா மிதுன்  நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது. அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர்.
 

தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறி வீடியோ வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதேபோல், விஜயையும் அவர் கடுமையாக விமர்சிக்க, விஜய் ரசிகர்களுக்கும், அவருக்கும் மோதல் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் நடிகர் சூர்யா ரசிகர்  புகார் மனு கொடுத்தனர். இதனை நடிகை மீரா மிதுன் “நடிகர் வடிவேல் காமெடி” என்ற ட்வீட் செய்து கிண்டல் செய்தததால் ஆத்திரம் அடைந்த சூர்யா ரசிகர்கள் மீராவின் உருவபொம்மையை எரித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்கும்படி சூர்யா மற்றும் ஜோதிகா ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் சார்பில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ வடிவேலு சில வருடங்களாக திரைப்படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவரின் இடத்தை சூர்யாவின் ரசிகர்கள் பிடித்துள்ளனர். சூர்யாவை விட அவர்கள் நன்றாக நடிக்கிறார்கள்’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து சூர்யா ரசிகர்கள் மீண்டும் மீராமிதுனை திட்ட துவங்கியுள்ளனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News