×

நசுங்கிருவாரு எந்திரிங்க நமீதா... மச்சக்காரன் உங்க மச்சான்ஸ்!

கணவருடன் நமீதா செய்யும் அட்ராசிட்டி

 

2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  

அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தன் கணவரை முதல் முதலாக சந்தித்த தினம் என்று கூறி அவர் மீதி ஏறி அமர்ந்து முத்தமிட்டு விளையாடிய சில ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு. இந்த 4 வருஷம் நதி நீர் போன்று வேகமாக சென்றுவிட்டது. இதே போன்று இன்னும் 40 வருடத்திற்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர்,  நசுங்கிருவாரு எந்திரிங்க... என கமெண்ட் செய்ய,  நடிகை குஷ்பு மச்சக்காரன் உங்க மச்சான்ஸ் என்று நக்கலடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News