×

இமைபோல் காப்பேன்.. காதல் மனைவிக்காக உருகிய ஆரவ்....

 

2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா இவரை காதலித்து தோல்வி அடைந்தது தனிக்கதை.  ஓவியாவாலேயே ஆரவும் பிரபலமானார்.

சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின் ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்தார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்து வரும்  ராஹி என்பவரை ஆரவ் காதலித்து வந்தார். தனக்கு ஒரு காதலி இருப்பதாக பிக்பாஸ் வீட்டில் ஆரவ் ஓவியாவிடம் கூறியது இவரைத்தான் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி இவர்களின் திருமணம்  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னனிலையில் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் நண்பர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து ‘இமைபோல் காப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News