×

மண்ணின் மைந்தனா?... உளறல் நாயகனா?... திமுகவை போஸ்டரால் திணறடித்த அதிமுக...

 

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. முதல்வராக பதவியேற்று 4 வருடங்களுக்கும் மேல் வெற்றிகரமாக அவர் கட்சியையும், ஆட்சியையும் நடத்திவிட்டதால் அதிமுக அவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இதை நிரூபிக்கும் வகையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக அவரே நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியையும், கட்சியையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கனவு தகர்ந்து போனது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அதிமுக தொழில்நுட்ப பிரிவுகள் ஆக்டிவாக செயல்பட துவங்கிவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு ஒப்பிட்டு ஸ்டாலினை கிண்டலடிப்பது போல் போஸ்டர்கள் தமிழகத்தில் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

admk

அந்த புகைப்படங்களை அதிமுக தொழில்நுட்ப பிரிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன.

admk

இதில், மண்ணின் மைந்தனா?... உளறல் நாயகனா?..., கலக்கல் நாயகனா?. சொதப்பல் நாயகனா?.., மக்களில் ஒருவரா?..  மடாதிபதியா?.. என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

admk

அதிமுக இப்படி அதிரடியாக பிரச்சாரத்தை துவங்கிவிட்டதால் இதை எப்படி சமாளிப்பது என கையை பிசைந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News