×

தெறிக்கும் வசனம்.. சீறும் சூர்யா... சூரரைப்போற்று  பட புரமோ வீடியோ....

சூரரைப்போற்று படத்தின் டயலாக் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி  ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து படத்தின் மீதான எதிர்ப்புகளை ஏற்படுத்திவிட்டது.

இத்திரைப்படம் முதலில் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருந்தது. படத்தின் சில காட்சிகளுக்காக விமானப்படையிடம் இருந்து ஒப்புதல் சான்றிதழ் ஒன்று வந்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் அந்த சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் முக்கிய வசனங்களை புரமோஷன் வீடியோவாக படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் தெறிக்கும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News