×

முரசொலியில் கிண்டல்!.. பாமகவை இழிவுபடுத்தும் திமுக... வலுக்கும் கண்டனம்....

 

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி சமீபத்தில் பாமாக போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு எதிரான செயல்பாட்டியில் திமுக இறங்கியுள்ளது.

பாமக 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பிடித்தது. அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் மற்றும் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கவுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக பாமகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இதன் எதிரொலியாக முரசொலி பத்திரிக்கையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை இழிவுபடுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.

ராமதாஸ் குறித்த கேலி சித்திரத்துடன் பாட்டாளி சொந்தம் என்கிற பெயரில் ‘வன்னியர்களுக்கான் இட ஒதுக்கீட்டிலிருந்து தற்போது பின் வாங்குவது ஏன்?’ என கட்டுரை வெளியிடப்பட்டுள்து. ராமதாஸ் இன்னும் அந்த கோரிக்கையிலிருந்து பின் வாங்கவில்லை. ஆனால், பின்வாங்கிவிட்டதாக திட்டமிட்டு பொய்யான செய்தி பதிவிடப்பட்டுள்ளது. இது ராமதஸுக்கு எதிரான பொய் பிரச்சாரம் மற்றும் அவரது பெயரை களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக செயல்பட்டுள்ளதாக வன்னிய சமுதாய மக்கள் புகார் கூற துவங்கியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு பாமகவை தனது கூட்டணிக்குள் கொண்டுவர திமுக மறைமுக பேரம் நடத்தியது. ஆனால், இதை பாமக ஏற்கவில்லை. எனவே தற்போது பாமக மீது சேறை இறைக்கும் வேலையில் திமுக இறங்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News