Categories: Cinema News latest news

ரசிகர்களை கண்டு பயந்து நடுங்கும் தனுஷ்.! அங்கயே எவளோ நாள் தான் இருக்கிறது.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் தனுஷ். இவர், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், என ஒரு பான் இந்தியா பிரபலம் போல திரையுலகில் நடித்து வருகிறார்.

இவர், நடிப்பில் கடைசியாக “கலாட்டா கல்யாணம்” இந்தி திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது. மேலும், நெட்ப்ளிக்ஸ் OTT தளத்திற்காக “தி கிரே மேன்” எனும் இதன் ஆங்கில ரிமேக் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, தனுஷ் “வாத்தி” எனும் தெலுங்கு, தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. மேலும், நானே வருவேன் எனும் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் அண்மையில், தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார். இதன், காரணமாகவோ என்னவோ தெரியவில்லை தனுஷ் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறாராம். வாத்தி படத்தின் சூட்டிங் இல்லை என்றாலும் அவர் ஐதராபாத்தில் தங்கி வருகிறாராம்.

இதையும் படியுங்களேன்-விவகாரத்திற்க்கு பின்னர் சூறாவளியாய் ஊர் சுற்றி வரும் ‘தனிக்காட்டு ராஜா’ தனுஷ்.!

ஒருவேளை, சென்னை வந்து இறங்கினால் ரஜினி ரசிகர்களால் ஏதேனும் தொல்லை வருமோ என அந்தப் பிரச்சனையில் சிக்க வேண்டாம் என ஒதுங்கி இருப்பதாக ஒரு தரப்பு கூறிவருகிறது.
இல்லை என்றால் “நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்களில் வேலைகள் காரணமாக தனுஷ் சென்னை வந்து இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது வரை அவர் ஹைதராபாத்திலே தங்கியிருக்கிறாராம்.விரைவில் அவர் சென்னை வந்து தனது படங்களில் நடிக்கவும் தனது குடும்பத்தாரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கணு பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan
Published by
Manikandan