
Cinema News
ரிவ்யூ கொடுக்க நீ யாரு?.. சினிமா அழியறதே உங்களால தான்!.. ப்ளூ சட்டை மாறனை நார் நாராய் கிழித்த ஆதவன்
மற்ற மொழி திரைப்படங்கள் தமிழ் சினிமாவை விட மேலோங்கி சென்று அடுத்தடுத்த கட்டத்திற்கு நகந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா இன்னும் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மற்ற மொழி திரைப்படங்கள் தமிழ்நாட்டில் நன்றாக ஓடி தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் படங்களை அந்த அளவுக்கு கொண்டாட தவறுவதற்கான காரணம் தமிழ் ரசிகர்கள்தான் என்று சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.
ஒரு படம் வெளியான அன்று அந்தப் படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் ரிவ்யூகளை யூடியூபர்கள் போட்டு பரப்புகின்றனர். தமிழ் ஆடியன்ஸை பொறுத்தவரை ஒரு படம் எப்படி என்பதை ரிவ்யூ பார்த்து விட்டு தான் இன்றைய காலத்தில் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அப்படி வரும் மக்களை யூடியூபர்கள் தேவையில்லாத நெகட்டிவிட்டிகளை பரப்பி அதைக் கெடுத்து விடுகின்றனர்.
அப்படி படம் நல்லா இருந்தும் ரிவ்யூ பார்த்து ஓடாத படங்கள் பல இருக்கின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சினிமா பிரபலம் ஆதவன். தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. அதற்கு காரணம் இவர்கள்தான் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ,”பல பேருக்கு புடிச்ச ஒரு படத்தை யூட்டிபில் ரிவ்யூ போடும் நீங்கள் எதற்காக நெகட்டிவிட்டியை பரப்புறீங்க?. அதுதான் என்னுடைய முதல் கேள்வி உண்மையிலேயே அந்த படம் நல்லா இல்லை என்றால் அதை வெளியில் சொல்வது தவறு இல்லை”.
”இதற்கு முன் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நான் பதிலடி கொடுத்திருக்கிறேன் அது பெரிதாக வெளியில் தெரியவில்லை. ஆனால் கூலி படத்திற்காக நான் பேசியது இன்று எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நான் ரஜினி ரசிகன் என்பதற்காக சொல்லவில்லை. ப்ளூ சட்டை மாறனை பார்த்து நான் கேட்டது நீங்கள் இந்த மாதிரி ரிவ்யூ கொடுப்பதால் பல சின்ன படங்கள் வெளியே தெரியாமலேயே போயிடுச்சு என்று சொன்னேன்”.

“அவர் சினிமாவில் அரசியல் பண்ணுகிறார். நல்ல படங்கள் எவ்வளவோ இருக்கு அதையெல்லாம் சிதைச்சிட்டாரு. ஒரு சில படங்களை நல்லா இருக்கு என்று சொல்லி இருக்கிறார். அப்போ அந்த படங்கள் மட்டும் தான் ஓட வேண்டுமா? ரிவ்யூ கொடுப்பவர்கள் நல்லதாக சொன்னால்தான் படம் ஓட வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் முதலில் அவர்களை அழைத்து படத்தை போட்டு காட்டி அப்புறம் தான் ரிலீஸ் செய்ய வேண்டும்”.
”இதெல்லாம் தேவையில்லாத விஷயம். இனிமேல் நான் பண்ண போற படத்திற்கு ரிவ்யூ என்று போட மாட்டேன். மை வியூ (my view) என்றுதான் போட போறேன். ப்ளூ சட்டை மாறனுக்கு 53 வயதாகிறது. ரஜினி சாருக்கு 75 வயதாகிறது சினிமாவில் அவருக்கு அனுபவம் 50 ஆண்டுகள். அப்படி இருக்கையில் அவர் அனுபவம் ப்ளூ சட்ட மாறனின் வயது. எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு. எல்லாருக்கும் வாழ்க்கை இருக்கு”.
”அவர்களை எல்லாம் நாம் கிண்டல் பண்ண முடியாது. கூலி படத்தை காட்டு மொக்கை என்கிறார். பழைய ஃபையர்ல இன்னும் ரஜினி ரசிகர்கள் இல்ல. அவங்க எல்லாம் இப்போ ரொம்ப அமைதி ஆயிட்டாங்க. இதுவே பழைய ரஜினி ரசிகர்களா இருந்தாங்கன்னா இந்த காட்டு மொக்க அப்படின்னு சொன்ன வாய் இருந்திருக்கவே இருந்து இருக்காது”. என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.