×

சினிமா விமர்சகர் வெங்கட் சுபா கொரோனாவால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி...

 
venkat

பிரபல எழுத்தாளர்,சினிமா விமர்சகர், நடிகர் என பல்வேறு முகங்களை உடையவர் வெங்கட் சுபா.  அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எனவே, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 20 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று இரவு 12.48 மணிக்கு மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News