Categories: Cinema News latest news

தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமா காலி செய்ய முடிவு செஞ்சிட்டாங்களோ.?! அதிர வைக்கும் பின்னணி.!

சில தினங்களுக்கு முன்னர் திரையுலகமே ஏன் தமிழ்நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு திருமணம் நடைபெற்றது என்றால் அது சினிமா தயாரிப்பளார், பைனான்ஸியர் அன்புச்செழியன் அவர்கள் வீட்டில் நடந்த அவரது மகள் திருமணம் தான்.

ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று கூடி அன்புச்செழியன் வீட்டில் தான் இருந்தார்கள் என்று கூறுமளவிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், போனிகபூர் கலைப்புலி தாணு, பிரபு, மனோபாலா, சிவகார்த்திகேயன், சிம்பு என்று நட்சத்திர பட்டாளங்களால் நிரம்பி வழிந்தது.

சில மாதங்களுக்கு முன்பு அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஓர் குறிப்பேட்டில் தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் பலர் அன்புச்செழியனிடம் ரொக்கமாக கடன் வழங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

கோ, வெற்றிமாறனின் விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவருடைய அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்னர்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதற்கடுத்ததாக அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம்  வருமான வரிதுறையினர் சோதனை நடத்த உள்ளனராம்.

இதையும் படியுங்களேன் – அந்த மாதிரி ஒரு வீடீயோவை காட்டி சிம்புவையே கவுத்திடீங்களே.! விஷயமே இதுல வேற.!

ரொக்கமாக பெற்ற அந்த பணத்திற்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அதனால் அன்புசெழியன் அவர்களிடம் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் தற்போது விழிபிதுங்கி நிற்கின்றனராம். அவர்கள் அன்புசெழியனிடமே தஞ்சமடைந்துள்ளனர்.

அன்புச்செழியன்,  கொஞ்சம் பொறுத்திருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல பதில் சொல்லி அனுப்பி வருகிறாராம். இப்படியே சென்றால் கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிப்பது பற்றி சற்று யோசிப்பார்கள் என்று தான். கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களை படம் தயாரித்தால் தான் கதைகளை கேட்டு படங்களை முடிவு செய்வார்கள். நல்ல படங்கள் கிடைக்கும்.

மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் படங்களை தயாரிக்க ஆரம்பித்தால்,  நடிகர்களின் மார்க்கெட் நிலவரம் என்ன, குறைந்தது எவ்வளவு லாபம் கிடைக்கும் என யோசித்து படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். கதைகள் சரியாக அமையாது என சினிமாவாசிகள் புலம்பி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan