Categories: Cinema News latest news

வாழ்த்து சொன்னது போதும் ஓடு பக்கி!.. வடிவேல் ஸ்டைலில் விரட்டிய இளையராஜா (வீடியோ)..

திரையுலகில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. 80களில் சினிமாவை கட்டி ஆண்டவர். இவர் இசை கிடைத்துவிட்டால் போதும். அந்த படம் வெற்றி பெற்றுவிடும் என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நினைத்த காலம் அது. எனவே, அவரை காண இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்திருந்தனர். இளையராஜாவின் இசையே பல திரைப்படங்களை ஓட வைத்தது.

ilayaraja

இப்போது அதிகமான படங்களுக்கு அவர் இசையமைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அவரின் இசையில் பாடல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்திலும் இனிமையான பாடல்களை கொடுத்திருந்தார்.

ilayaraja

இந்நிலையில், நேற்று அவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, திரையுலகினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு போனார். அதேபோல், திரையுலகை சேர்ந்தவர்கள், பாடகர்கள், சின்ன சின்ன நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் சென்னை கோடம்பாகத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால் ‘வாழ்த்து சொன்னது போதும் ஓடு பக்கி’ என வடிவேல் சொல்வது போல் தனக்கு வாழ்த்து சொல்ல வந்தர்களை இளையராஜா அங்கிருந்து கிளம்ப செல்லும் காட்சிகள் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அதுவும் கிளம்பு என கூறிய பின்பும் நடிகர் கொட்டாச்சி சிலைபோல் அங்கு நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும், இளையராஜா அவரை ஏற இறங்க பார்ப்பதும் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video courtesty to thanthi tv

Published by
சிவா