Categories: Cinema News latest news

120 கோடி பட்ஜெட்… 1600 தியேட்டர்.. பேருக்கு ஏத்த மாதிரி மாஸ் காட்டுமா குபேரா?

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் குபேரா. வரும் ஜூன் 20ல் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைப் பற்றி பல லேட்டஸ்ட் தகவல்களைப் பார்க்கலாமா…

குபேராவில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பட்ஜெட் 120 கோடி. அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுனில் நாரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு வெளியாகிறது. இவை தவிர பிற மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனராம். படம் 1600 தியேட்டர்களில் வெளியாகிறது.

படத்தோட கதை என்னன்னா உலகத்துலேயே பெரிய பணக்காரனுக்கும், மிகவும் மோசமா வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பவனுக்கும் இடையே நடக்கும் சக்திவாய்ந்த மோதல் தான் படத்தோட கதை.

படத்தோட டைரக்டர் சேகர் கம்முலா தனுஷிடம் இந்தக் கதையை சொல்லி இருக்கிறார். அடுத்த 20 நிமிடங்களில் படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம் தனுஷ். ரசிகர்களுக்க இந்தப் படம் நிச்சயம் இது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்கிறார்கள்.

தனுஷ் படம் என்றாலே அதுல ஒரு உயிரோட்டமான நடிப்பு இருக்கும். தான் நடிக்கும் கேரக்டர் எத்தகையதாக இருந்தாலும் சரி. அதில் அப்படியே கலந்து விடுவார். அந்த வகையில் குபேரா படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் அப்படியே அசத்தி இருக்கிறார்.

படத்தில் நீண்ட தாடியுடன் அவரது கெட்டப்பைப் பார்க்கும்போது தனுஷ்தானா என்று நம் விழிகளை விரிய வைக்கிறார். படத்தின் கதையும் வித்தியாசமாக இருப்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி என படம் வெளியாக இருப்பதாலும் பெரும்பாலான ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படத்துக்காக ஆவலோடு காத்துள்ளனர்.

இது தனுஷின் 51வது படம். இதற்கு முன் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் படம் 150 கோடி வசூலித்தது. அதுதான் அவரது படங்களில் அதிகபட்ச வசூல். இந்தச் சாதனையை குபேரா முறியடிக்குமா? பேருக்கேத்த மாதிரி வசூல் சாதனையைப் படைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v