Connect with us

Cinema News

2024ல் நடந்த மேரேஜஸ்… கணவர் பெயரை சொல்லாத நடிகை யார் தெரியுமா?

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’. ‘கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார்’னு சொல்வாங்க. ஆனால் இப்போது எல்லாமே ஜூஜூபி ஆகி விட்டது. இக்கால யுவன், யுவதிகளுக்கு பெரும்பாலும் காதல் திருமணங்கள் தான். அதுவும் காதலைப் பாடமாகச் சொல்லித் தரும் சினிமா என்றால் கேட்கவா வேண்டும். வாங்க நம்மையோ ஷாக் ஆக்கிய அந்த சில திருமணங்களைப் பார்ப்போம்.

பிரேம்ஜி அமரன்

premji amaran

premji amaran

நடிகர் பிரேம்ஜி அமரன் கல்யாணமே பண்ணிக்க மாட்டாருன்னு சொன்னாங்க. இவரு திடீர்னு எனக்குக் கல்யாணம்னு சோஷியல் மீடியாவுல அறிவிச்சாரு. அது வைரலாச்சு. ஆனா உண்மையாகவே காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டாங்க. முதல்ல பேஸ்புக், வாட்ஸ் அப் சாட்னு காதல் வளர்ந்தது.

இந்து என்ற பொண்ணைக் காதலிச்சிருக்காரு. அவருக்கு வயது 22. இவருக்கு வயது 48. கல்யாணத்துக்கு வரதட்சணை ஒரு கிலோ தங்கமாம். 9 ஜூன் 2024ல் நடந்த இந்தக் கல்யாணத்துக்கு இளையராஜா வரவில்லை.

அபர்ணா தாஸ்

அபர்ணா தாஸ். டாடா படத்தில் நடித்தவர். இவர் யாரைத் திருமணம் செய்தார் என்றால் மஞ்சுமல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போல்கைத் தான் திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2024 ஏப்ரல் 24ல் குருவாயூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் பல வருஷமா டேட்டிங் பண்ணி லவ் பண்ணிருக்காங்க. அபர்ணா முதலில் மாடலிங்கில் இருந்துள்ளார். மலையாளத்தில் தான் முதலில் நடிகையாக அறிமுகமானார்.

அபிஷேக் ராஜா

அபிஷேக் ராஜா என்பவர் யூடியூப் சேனலில் பிரபலமானவர். இவர் தனது காதலியான ஸ்வாதியை கரம்பிடித்துள்ளார். சன்டிவியில் வரும் அன்பே வா சீரியல் நடிகர் விராட் நவீனாவைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

ஷங்கரின் மகள் திருமணம்

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா. இவர் தருண் கார்த்திக்கேயன் என்பவரைத் திருமணம் செய்தார். அதுக்கு முன்னாடி ஐஸ்வர்யா ஏற்கனவே 2021ல் ஒரு இந்திய கிரிக்கெட்டர் தாமோதர ரோகித்தைக் கல்யாணம் செய்தவர். அவர் போக்சோ சட்டத்தில் கைதானார்.

அதனால் வீட்டில் தனியாக இருந்த அவரை ஷங்கர் தனது உதவி இயக்குனர்களில் ஒருவரான தருண் கார்த்திகேயனுக்கு ஷங்கர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவ் என்பவரை 3 ஜூலை 2024ல் திருமணம் செய்து கொண்டார். அவர் பாம்பேயில் பெரிய கேலரியை வைத்துள்ளார். அடிக்கடி மும்பை செல்லும்போது வரலட்சுமி காதல்வயப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குட் நைட் நடிகை

meera ragunath

meera ragunath

குட் நைட் நடிகை மீதா ரகுநாத் தனது கணவர் யார் என்ன வேலை செய்கிறார் என எந்த ஒரு சோஷியல் மீடியாவிலும் சொல்லவே இல்லை. இவர் 2022ல் முதல் நீ முடிவும் நீ என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

அப்போ யாரும் இவரைக் கண்டுக்கவில்லை. குட்நைட் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அடுத்தடுத்து வேற லெவலுக்குச் செல்வார் என எதிர்பார்த்தால் திடீர்னு மார்ச் 17, 2024 அன்று கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி விட்டார். இவர் தனது கணவரை ‘மை ஹோல் ஹார்ட்’ என்றே அழைக்கிறார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top