Connect with us

Cinema News

2024-ல் சினிமா பிரபலங்களுக்கு இவ்ளோ டைவர்ஸா?

நடிகர் தனுஷ் முதல் ஏ.ஆர்.ரகுமான், சீனுராமசாமி வரை பல பிரபலங்களுக்கு 2024 அதிர்ச்சி அளிக்கும் ஆண்டு என்றே சொல்லலாம். ஏ.ஆர்.ரகுமான்-சாய்ராபானு, ஜெயம்ரவி-ஆர்த்தி, தனுஷ்-ஐஸ்வர்யா மற்றும் சீனு ராமசாமி உள்பட பல தம்பதியர் விவாகரத்துகளை செய்து கொண்டனர். விவரம் என்னன்னு பார்க்கலாமா…

தனுஷ்- ஐஸ்வர்யா

dhanush ayswarya

dhanush ayswarya

தனுஷ் ஐஸ்வர்யா 2004ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. புகைந்து கொண்டு இருந்த அந்த புகைச்சல் விவாகரத்தாக வெடித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த பிரிவு அதிர்ச்சியைத் தந்தது. நீதிமன்ற விசாரணைக்கு 2 முறை வந்தது. ஆனா அவங்க ஆஜர் ஆகலை.

சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு இருக்காங்க. அதனாலதான் ஆஜராகலன்னும் சொன்னாங்க. ஆனா நவம்பர் 27ல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன இருவரும் தங்களுக்கு ஒன்று சேர்ந்து வாழ விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. நீதிமன்றமும் விவாகரத்து கொடுத்தது.

ஜிவி பிரகாஷ் – சைந்தவி

இந்த ஜோடி பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்தனர். 2013ல் திருமணம் செய்தனர். ஜிவி.பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய பாடல்களை ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. ஆனா திடீர்னு விவாகரத்து அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

ஜெயம் ரவி – ஆர்த்தி

jayam ravi aarthi

jayam ravi aarthi

காதல் திருமணம் செய்து கொண்டு 15 வருஷங்களுக்கு மேலாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். திடீர்னு தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக ஜெயம்ரவி அறிவித்தார்.

ஆனா விவாகரத்து பற்றி என்னிடம் பேசாமல் ரவி எடுத்த தன்னிச்சையான முடிவு இதுன்னு ஆர்த்தி சொன்னாங்க. தன்னை மனைவியும், மாமியாரும் அடிமைப்படுத்துவதாக ஜெயம்ரவியும் மறைமுகமாக குற்றம்சாட்டினார். இருவருக்கும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் சொன்னது நீதிமன்றம். ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் – சாய்ராபானு

இந்த வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து தான். திருமண வாழ்க்கையில் 30வது வருஷத்தை எட்டும்னு எதிர்பார்த்தாங்க. இந்தப் பிரிவு இருவருக்குமே மனவருத்தம் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.

தன்னோட உடல்நிலையால் பிரிவதாக சாய்ராபானு தெரிவித்தார். மேலும் ரகுமான் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ராபானுவுடன் சேர்ந்து அவரது மகன், மகள் கூறினர்.

சீனுராமசாமி- ஜிஎஸ்.தர்ஷனா

seenu ramasamy

seenu ramasamy

தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன், தர்மதுரை ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். இயக்குனர் சீனு ராமசாமியும் தனது 17 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இவரது மனைவி ஜிஎஸ்.தர்ஷனாவிடம் இருந்து விடைபெறுவதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது. பொறுப்பாகாது. இது எங்களது தனிப்பட்ட முடிவு. மதிப்பு கொடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த இந்த விவாகரத்துகள் சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top