Categories: Cinema News latest news

25 வருடங்களில் பொங்கலுக்கு வெளியாகி அதிக வசூலை அள்ளிய படங்கள்..! கெத்து காட்டிய விஜய்

2000த்தில் இருந்து 2025 வரை உள்ள பொங்கல் தினத்தில் வெளியான தமிழ்ப்படங்களில் வசூலைப் பொருத்தவரை என்னென்ன டாப் 1ல வந்ததுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

வானத்தைப் போல: 2000ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களில் அதிக வசூலை அள்ளிய படம் விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல. இதன் மொத்த வசூல் 25 கோடி. 2001ல் அதிக வசூல் ஆன படம் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ். இதன் மொத்த வசூல் 36 கோடி. 2002ல் அதிக வசூல் ஆன படம் கமல், சிம்ரன் நடிப்பில் வெளியான பம்மல் கே.சம்பந்தம். இதன் மொத்த வசூல் 28 கோடி.

திருப்பாச்சி: 2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் 30 கோடியும், 2004ல் வெளியான கமலின் விருமாண்டி படம் 40 கோடியும் வசூலித்தது. 2005ல் விஜய் நடித்த திருப்பாச்சி 38 கோடியும், 2006ல் விஜய் நடித்த ஆதி படம் 24 கோடியும் வசூலித்தது. 2007ல் விஜய் நடித்த போக்கிரி படம் 75 கோடியும், 2008ல் விக்ரம் நடித்த பீமா படம் 26 கோடியும் வசூலித்தது.

ஜில்லா: 2009ல் விஜய் நடித்த வில்லு படம் 32 கோடியும், 2010ல் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் 47 கோடியும், 2011ல் கார்த்தி நடித்த சிறுத்தை படம் 55 கோடியும் வசூலித்தது. 2012ல் விஜய் நடித்த நண்பன் படம் 92 கோடியும், 2013ல் சந்தானம் நடித்த கன்னா லட்டு தின்ன ஆசையா படம் 33.5கோடியும் வசூலித்தது. 2014ல் விஜய் நடித்த ஜில்லா படம் 110 கோடியும், 2015ல் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் 230 கோடியும் வசூலை அள்ளியது.

பேட்ட: 2016ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் 51 கோடியை அள்ளியது. 2017ல் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படம் 130 கோடியையும், 2018ல் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மொத்த வசூல் 95 கோடி என முதலிடம் பிடித்தது. 2019ல் ரஜினி நடித்த பேட்ட படம் 220 கோடியும், 2020ல் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் 201 கோடியும் வசூலித்து சாதனை புரிந்தது.

மாஸ்டர், மதகஜராஜா: 2021ல் விஜய் நடித்த மாஸ்டர் படம் 250 கோடியை வசூலித்தது. 2022ல் சதீஷ் நடித்த நாய்சேகர் படம் 8 கோடியையும் பெற்றது. 2023ல் விஜய் நடித்த வாரிசு படம் 305 கோடியும், 2024ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் 89 கோடியையும் அள்ளியது. 2025 பொங்கலுக்கு விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா தான் வின்னர். இதன் வசூல் 27 கோடியைக் கடந்து கொண்டுள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v