Connect with us

Cinema News

தனித்துவிடப்பட்ட கமல்.. ஒட்டுமொத்தமாக பின்வாங்கிய தமிழ் திரையுலகம்

தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். அவர் இந்த சினிமாவுக்கு ஆற்றிய பங்கு என்பது சாதாரணமானதே கிடையாது. கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கி இருக்கிறார் என்றால் அதில் ஒரு 60 வருடம் இந்த சினிமாவிலேயே இருந்திருக்கிறார். அப்படி இந்த சினிமாவிற்காகவே வாழ்ந்து சினிமாவிலேயே அவ்வளவு விஷயங்களை செய்து அளப்பரிய வெற்றிகளை கொடுத்து மிகப்பெரிய வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு கமல்ஹாசனுக்கு இங்கு இருக்கிற சினிமா அமைப்புகள் எந்த விதத்தில் உதவியாக இருந்தது என்றால் ஒரு வகையிலும் உதவியாக இல்லை.

அதுதான் மிகவும் வெட்கக்கேடு. மானக்கேடு. இன்னொரு விதத்தில் பார்க்கும் பொழுது கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியிட வேண்டாம் என்று கமல் சொல்கிறார் என்றால் அதன் மூலம் 20 கோடி அவருக்கு நஷ்டம் .ஆனால் பரவாயில்லை என்று அவரால் போக முடியும் .ஆனால் இவருக்கு ஆதரவாக பேசும் போது மற்ற தமிழ் படங்கள் கர்நாடகாவில் ஓட முடியாமல் போகும் பட்சத்தில் அந்த நஷ்டத்தை மற்ற தயாரிப்பாளர்களால் ஈடுகட்ட முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனால் இப்படி ஒரு பொதுவான பிரச்சனையில் குறைந்தபட்சம் வார்த்தைகளை அதிகமாக விட வேண்டாம். கமல்ஹாசனை எப்படி கேட்கலாம் என அதிரடியாக கேட்க வேண்டாம். நல்லா யோசித்துப் பாருங்கள். தமிழ் தான் மூத்த மொழி .வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு தூரம் ஒரு கோபத்தை கமல் மீது காட்டணுமா. உங்கள் மொழி மீது அவர் வெறுப்பை கொட்டினாரா. இல்லையே.

என் சகோதர மொழி அப்படி என்று தானே கூறினார். இது தவறான வார்த்தையா என்ற வகையில் யாராவது கேட்டிருக்கலாம். ஆனால் அதையும் யாருமே கேட்கவில்லை. இன்னும் பெரிய வருத்தம் என்னவெனில் தமிழ்நாட்டில் இருக்கிற மொழியியல் ஆய்வாளர்கள் பழுத்த தமிழறிஞர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவரும் அமைதியாக இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஞானசம்பந்தன் பிரமாதமான பேச்சாளர் கமலுக்கு நெருங்கிய நண்பர் .அவரும் இதைப்பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை.

இங்கு தமிழை மிக அழகாக பேசகூடியவர் வைரமுத்து. அவரை தவிற தமிழை வேறு யாரும் அழகாக பேசிவிட முடியாது. அவரும் இதை பற்றி எதுவும் பேசவில்லை. கடைசியில் இது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக மாறிவிடக் கூடாது. ஏனெனில் இது கமல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. இதனால் இங்கு இருந்து கர்நாடகாவிற்கு வேலைக்கு செல்லும் மக்களுக்கும் ஏற்படக் கூடிய பிரச்சினையாக மாறிவிடும் என அந்தணன் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top