90களில் திரையரங்குகளைத் தெறிக்க விட்ட நடிகைகள் அழகான நடனமாடி இன்ஸ்டாவில் வைரல் ஆக்கியுள்ளனர். அவர்கள் யார் யார்னு தெரியணுமா?
ரொம்பவே கியூட்: நடிகை மீனா, மகேஷ்வரி, சங்கீதா இவர்கள்தான். மீனா ஒரு நைட்டியிலும், மகேஷ்வரி, சங்கீதா ஸ்லீவ்லெஸ் டிரஸ்சிலும் ஹலோ மிஸ்டர் காதலா பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் போடும் டான்ஸ் ஸ்டெப் ஒவ்வொன்றும் ரொம்பவே கியூட்டாக உள்ளது. ஆறாயிரத்து 600 லைக்குகள் விழுந்துள்ளது. மீனாவுக்கு அவரது கணவர் இறந்து விட்டார். அப்படி இருந்தும் அவரால் எப்படி இப்படி எல்லாம் டான்ஸ் ஆட முடிகிறது என்ற ரசிகர்கள் கேட்கலாம்.
நோ கவலை ஒன்லி டான்ஸ்: அந்த வகையில் கமெண்ட்டில் ரசிகர் ஒருவர் புருஷன் இல்லாத கவலை கொஞ்சம் கூட இல்லையேன்னு கேட்டுள்ளார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக கமெண்டில் ரசிகர் ஒருவர் இப்படி பதில் அளித்துள்ளார். ஏன் ஒரு பொண்ணு புருஷன் இல்லையேனு எப்போதும் கவலையாகத் தான் இருக்கணுமா?ன்னு கேட்டு இருக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர்: 1998ல் வெளியான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை சுந்தர்.சி. இயக்கியுள்ளார். பிரபுதேவா, மீனா, ஜெயராம், மகேஷ்வரி, ஜெமினிகணேசன், செந்தில், விவேக், மணிவண்ணன், எஸ்எஸ்.சந்திரன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹலோ மிஸ்டர்: இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். ‘ஹலோ மிஸ்டர்’ என்ற இந்தப் பாடலை உதித் நாராயணன், சாதனா சர்கம், அனுராதா பாவல் ஆகியோர் பாடியுள்ளனர்.
படத்தில் இந்தப் பாடலைப் பார்க்கும்போது அட்டகாசமாக இருக்கும். பிரபுதேவாவுடன் இணைந்து மீனாவும், மகேஸ்வரியும் கலக்கலாக நடனம் ஆடுவார்கள். பாடலும் சரி. நடனமும் சரி. விறுவிறுப்பாக ரசிக்கும் வகையில் இருக்கும்.
கவர்ச்சி விருந்து: அந்த உற்சாகம்தான் இப்போது இவர்களை மீண்டும் ஆடச்செய்துள்ளது என்றே தோன்றுகிறது. பாடலில் மீனாவும், மகேஷ்வரியும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களைக் கவர்ச்சி விருந்தில் திக்குமுக்காடச் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ லிங்க்கைக் காண:
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…