Categories: Cinema News latest news

அஜித்திடம் இருக்கும் ஆர்வம்! மூன்று முறை நடந்த சந்திப்பு.. பிரசாந்த் நீல் – அஜித் இடையே நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்.இவருக்கு என தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதற்கடித்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். அஜித்துக்கான மவுசு துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அதிகமாகவே இருக்கிறது.

ஆரம்பகாலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு போராடி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்றால் அது அவருடைய உழைப்பிற்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம். இன்று ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறார் அஜித். சினிமாவில் போட்டி என்பது சாதாரணம்தான். அந்த வகையில் அஜித்துக்கு போட்டியாக இருப்பவர் விஜய்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் இருவரின் குடும்பமும் அன்பாக பழகிவருகிறார்கள்.துணிவு படத்தோடு விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. அதில் விமர்சன ரீதியாக துணிவு படம் அமைந்தது. வசூல் ரீதியில் வாரிசு படம் அமைந்தது.

அதன் பிறகும் இருவர் படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்தன. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் கோட் திரைப்படமும் விடாமுயற்சி திரைப்படமும். ஆனால் விடாமுயற்சி படம் ஆரம்பிக்கும் போதே பல பிரச்சினைகளை சந்தித்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி இந்த படத்திற்கு அஜித் அடுத்ததாக யாரோடு இணைய இருக்கிறார் என்ற தகவல்தான் இப்போது வைரலாகி வருகின்றது. அதாவது கே.ஜி.எஃப் , சலார் போன்ற படங்களை கொடுத்த பிரசாந்த் நீல் அடுத்ததாக அஜித்தை வைத்துதான் எடுக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டே இருந்தது.

praஆனால் இது ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் சிலர் கூறி வந்தார்கள். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பிரசாந்த் நீலும் அஜித்தும் சேர பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் அஜித் பிரசாந்த் நீலை 3 முறை சந்தித்தார் என்றும் அவருடன் சேர்ந்து படம் பண்ண அஜித்துக்கு ஆர்வம் இருந்ததாகவும் சித்ரா லட்சுமணன் கூறினார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்